| பாதத்தை யான்வணங்கி பரமநாதா பாருலகில் குளிகைகொண்டு வந்தேன்யானும் நீதமுடன் தங்களது வாசீர்மத்தில் நிலையான வசுவத்தின் மார்க்கந்தன்னை தோதமுடன் காண்பதற்கு வந்தேன்யானும் தோற்றமுடன் பறக்கின்ற வசுவந்தன்னை நீதமுடன் அடியேனுங் காணவென்று நீதியுடன் தம்பதிக்கு வருகலாச்சே |