| இறங்கியே மலைவளத்தைச் சுற்றங்கண்டேன் எழிலான மலைசுத்திகானாறுண்டு நிறம்வேறு ரிஷிமுனிவர் அங்கேயுண்டு நேர்மையுடன் பச்சைவண்ண மாண்பரப்பா திறமுடைய சீஷவர்க்கம் சொல்லொண்ணாது தீர்க்கமுடன் வெகுபேரைக்கண்டேன்யானும் உயமான மாணாக்கர் ஓடிவந்து வுத்தமனே எந்தனையும் கண்டிட்டாரே |