| மண்ணாகிப்போனாரே சித்துதாமும் மகத்தான வையகத்தின் ஆசையற்று கண்ணபிரான் முதலானோர் மண்ணில்மாண்டார் காசினியில் யாரிருந்தார் வுலகுதன்னில் வண்ணமுடன் சித்துமுனி ரிஷியார்தாமும் வளமுடனே யிப்படியே மாண்டாரல்லோ எண்ணமது கொண்டல்லோ வுலகுதன்னில் எழிலான வாசையது வொழிந்திட்டாரே |