| உரைத்துமே சிலகாலம் சென்றபின்பு ஓகோகோ நாதாக்கள் சித்துதம்மால் திரைப்புடனே மறுபடியும் வருவேனென்று திட்டமுடன் ஜெயமுனியார் சொன்னவாக்கு நிரைப்புடனே முப்பதுவாண்டுசென்று நேர்மையுடன் சீஷவர்க்கம் வந்துநிற்க மரைப்பில்லா சித்துமுனிநாதர்தாமும் மார்க்கமுடன் சமாதிவிட்டு வந்திட்டாரே |