| பாரேதான் சித்துவருங் காலந்தன்னில் பாருலகில் சீஷவர்க்க மெல்லாருந்தான் நேரேதான் சமாதியது வெடிக்குமுன்னே நேர்மையாந்திருக்கூட்டமாண்பரோடும் சீரேதான் சமாதியது முன்னேநின்று சிறப்பான சித்துவருங்காலமென்று தீரேதான் வெகுகோடி மாண்பராலே தீர்க்கமுடன் சமாதியிட மிருந்தார்தாமே |