| அமைத்தாரே பலபலவாம் வர்ணமாகும் வப்பனே சீனபதி மார்க்கத்தோர்கள் சமைத்தாரே மதியாலே காசுதன்னை சட்டமுடன் தானமைத்தார் வினோதங்கோடி இமையாமல் ரூபமதைத் தானழைத்து எழிலான ராஜாதிமாண்பருக்கு சுவைபோலும் தங்கமென்ற காசுதன்னை சூட்டினார் நாவில்லை சொல்லொண்ணாதே ஒண்ணாது யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மகத்துவந்தான் எண்ணாது புலிப்பாணி மைந்தாகேளு எழிலான காலாங்கி சொன்னநீதி திண்ணமுடன் தேசமெலாஞ் சுத்தியல்லோ தேற்றமுடன் ஜெயமுனியைக் கண்டேன்யானும் வண்ணமுடன் வெகுகாலமிருந்தசித்து மார்கமுடன் சமாதிதனைக் காண்பேன்பாரே |