| மதிப்புடனே ரிஷியாரும் சொல்லும்போது மார்க்கமுடன் உரைத்தேனங்கே பதியான பதிவிட்டு திரவியங்கள் பட்சமுடன் இவ்விடத்தில் வந்தேன்யானும் நிதியான திரவியங்கள் கோடாகோடி நீட்சியுடன் எடுப்பதற்குகையுமில்லை விதியான முறைப்படியே சாத்திரத்தை விருப்பமுடன் போதித்து எடுப்பேன்தானே |