| பாரேதான் சல்லியத்தின் சாத்திரந்தான் பாங்கான கணிதமென்ற படிதானப்பா நேரேதான் பாதனங் கிழக்குதன்னில் நேர்மையுடன் வஞ்சனத்தை பார்க்கும்போது சீரேதான் திரவியங்கள் கிடாரவைப்பு சிறப்பான மலைதனிலே கோடியுண்டு கூரேதான் வைப்பதனை சல்லியத்தால் கொற்றவனே எடுத்தேனே கோடியாமே |