| கானான நிதிகளது எடுக்கலென்ன தட்சணமும் மலையமுனிவாசீர்மத்தில் கேனான குருக்கள்முதல் சித்துயாவும் கூட்டியே யெனையழைத்து கொண்டுசென்றார் மானான மனோன்மணியாள் கிருபையாலே மகத்தான நிதியெடுக்க சென்றேனங்கே தேனான தென்மலையாங் கடலோரத்தில் தேற்றமுடன் யான்சென்றேன் பதிதானுண்டே |