| மயங்கியே மாண்பரெல்லாங் கூட்டங்கூடி மகத்தான ஜெயமுனிவர் சீடர்பக்கல் தயங்கியே சீடர்களைத்தானும் பார்த்துத் தாரிணியில் புதுமையிது யாங்கள்கண்டோம் நயம்புடனே சீனபதிதேசம்விட்டு நலமான காலாங்கி சீடன்தானும் செயமுடனே குளிகைகொண்டு யிங்குவந்தார் சீரான மகத்துவங்கள் சொல்லொண்ணாதே |