| துதித்துமே எந்தனிட பக்கல்வந்து துறையோட முறையோடும் அஞ்சலித்து மதிப்புடனே எந்தனையும் யாரென்றார்கள் மகத்தான மாண்பரெல்லாங் கூட்டங்கூடி பதியான மாநகரம் வதிசயங்கள் பாரினிலே இதுவரையில் கண்டதில்லை ததிதாகத் தோற்றுகுது யென்றுமல்லோ புத்தியுடன் மாண்பரெல்லாம் மயங்கினாரே |