| நினைக்கையிலே யான்வருகுங் காலந்தன்னில் நீதியுடன் சமாதியது வெடிக்கும்பாரு புனைமேவுஞ் சமாதியது வெடிக்கும்போது புகழான ஜெகஜோதி தோற்றும்பாரு வினைபோன்ற சடலமதுவெளியேயேகி விருப்பமுடன் சித்துமுனி வந்துமேதான் முனையான மூதுலகோர் நடுநடுங்க வுத்தமரும் வெளிதனிலே வந்திட்டாரே |