| நலமான வார்த்தையது மிகவுங்கூறி நன்மையுடன் கடுவெளியார் சித்துதாமும் பலமான தேகமதை நம்பொண்ணாது பாரினிலே இருந்தவர்கள் யாருமில்லை குலமான பதியைவிட்டு சிலதுகாலம் கொற்றவனே சாதிதனிலிருப்பேனென்று தலமுடனே கடுவெளியார் சித்துதாமும் சட்டமுடன் போகரிஷிக்குரைத்திட்டாரே |