| வந்தேனே யின்னமொரு யுகமிருந்து வளமையுடன் சமாதிக்குப் போவேனென்றும் அந்தமுடன் கதண்டுமகாரிஷியாருக்கு வன்புடனே வாக்கதுவும் மிகவுங்கூறி முந்தினதோர் காலாங்கி சீடர்தம்மை மூதுலக்லி காண்பதற்கு யெண்ணங்கொண்டு சிந்தனையில் தானினைத்து சித்துதாமும் திட்டமுடன் போகர்தம்மை கேட்டிட்டாரே |