| என்னவே கடுவெளியார் சித்துதாமும் எழிலான கெடுவதுவுஞ் சென்றுமேதான் பன்னவே சித்துவருங் காலமாச்சு பாங்கான சீஷரெல்லாம் வந்திருந்தார் முன்னமே தாமுரைத்த வாக்கதெல்லாம் மூதுலகில் நிறைவேற நாளுமாச்சு சொன்னதொரு காலமது முடிவுமாச்சு சுந்தரனார் சமாதியது வெடிக்கலாச்சே |