| என்றிட்ட போகமுனி ரிஷியார்தாமும் எழிலான சீனபதி விட்டுமல்லோ குன்றிட்ட குளிகையதை பூண்டுகொண்டு கொப்பெனவே வடகோடி யாசீர்மத்தில் தன்றிட்ட மாகவல்லோ தரணிமீதில் சாங்கமுடன் குளிகைகொண்டு இறங்கினேன்யான் சென்றிட்ட வடகோடி கானகத்தில் சேனையுடன் சீஷவர்க்கம் எழுந்திட்டாரே |