| கொடுக்கவே யடியேனும் பவளம்பூண்டு கொப்பெனவே குளிகையது பூண்டுகொண்டு விடுபட்டு சீனபதி வந்தேன்யானும் விட்டகுறை யிருந்ததொரு வலுமையாலே தொடுகுறிபோல் பவளமென்ற காட்டகத்தை தொல்லுலகில் வாரிதியைக் கண்டுவந்தேன் கடுவெளியாஞ் சித்தருட கடாட்சத்தாலே கனமுடனே சீனபதிவந்திட்டேனே |