| பாரப்பா சீஷவர்க்கம் சொன்னபோது பாருலகில் யானுமல்லோ திடுக்கிட்டேங்கி தேரப்பா தரம்போல நின்றுவிட்டேன் தெளிமையுடன் அவர்பாதம் தொழுதேன்நானும் காரப்பா யென்றுரைத்து கரமெடுத்து கர்த்தாவே ரட்சிக்க வேண்டுமென்றேன் ஆரப்பா காலாங்கி சீஷர்தன்னால் வப்பனே யுந்தனையும் மதித்தோம்பாரே |