| ஆச்சென்று தேறையசித்துதாமும் வன்பாக ரிஷியார்க்குத் தாமுரைக்க மூச்சடங்கி சிலகாலம் எந்தன்பக்கல் முடிவான வாண்டுவரு முடிவுமட்டும் வீச்சுடனே சமாதியது யிருக்கவென்று விருப்பமுடன் ரிஷியாரும் வாக்களித்தார் பாச்சலென்ற சுவாசமது தானடக்கி பட்சமுடன் தானிருக்க வரந்தந்தாரே |