| பாரேதான் தேறையமுனிவர்தாமும் பண்மையுடன் சமாதிதனிலிருந்துகொண்டு தீரமுடன் தேறையமுனிவர்தம்மை திறமுடனே யாரென்று கேட்கும்போது சேரேதான் சித்துமுனி ரிஷியைப்பார்த்து சிறப்புடனே தாமுரைப்பார் முனிவர்தாமும் நேரேதான் அகஸ்தியனார் சீஷரென்றார் நேர்மையுடன் தேறையமுனிவர்தானே |