| தானான சித்துமுனி ரிஷிகளெல்லாம் தண்மையுடன் சமாதியுட பக்கல்வந்து கோனான எனதையர் அகஸ்தியர்தம்மை கொற்றவனார் குருபதத்தை தாம்நினைத்து தேனான சித்தர்முனி வருவதற்கோ தேசமெல்லாங் கண்டுமனங்களிப்பதெப்போ பானான சமாதியது பாறைதானும் பாருலகில் வெடிப்பதெப்போ வென்றிட்டாரே |