| ஊதினார் தேறையமுனிவர்தானும் ஓகோகோ நாதாக்கள்பின்னுமல்லோ சாதிகெட்ட பையலவன் பின்னும்வந்து சட்டமுடன் துருத்திகொண்டு வூதுகிறார்பார் பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பட்சமுடன் தாமுரைப்பார் அகஸ்தியார்தாமும் நீதிமுறையில்லையோதான் சித்தருக்கு நிஷ்டூரந்தானதிகம் வுரைத்தார்பாரே |