| கூறினேன் காலாங்கிநாதரையர் கொற்றவனார் நற்சீஷனென்றுரைத்தேன் மாறிடவே சூரனவன் மகிடிநந்துமல்லோ மகிமையெல்லாந் தாமுரைத்தாரெந்தனுக்கு கோறிவந்த வினயங்கூடலாச்சே குவலயத்தில் அதிசயங்கள்தாமுரைத்தார் வேறிடமாம் மலைகுகைகள் யாவுஞ்சொல்லி விருப்பமுடன் எந்தனுக்கு விடைதந்தாரே |