| ஆனாரே ரிஷியாரும் எந்தனுக்கு வன்புடனே கைவசமுமானார்தாமும் போனேனே குகைகடந்து சென்றேன்யானும் பொங்கமுடன் வீரபத்திரன் தனைக்கடந்தேன் வானோர்கள் தான்புகழும் பத்மாசூரன் வண்மையுள்ள குகைதனையே யானுங்கண்டேன் ஞானோபதேசமது கூறிக்கொண்டு கயம்படவே சமாதிதனி லிருந்திட்டாரே |