| உண்மையா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வுத்தமனே குகைக்குள்ளே செல்வதற்கு நன்மையுடன் பிரனவமாம் சக்கரந்தான் நலமுடனே யான்கொடுத்தேன் யுந்தனுக்கு கண்மையாஞ் சக்கரத்தைக் கைபிடித்து கவனமென்ற குளிகைகொண்டு செல்வாயானால் வண்மையுடன் வுந்தனுக்கு வசியமாவார் வளமுடனே நாதாந்த சித்துதாமே |