| கொள்ளவே யாசீர்மம் கொண்டபோது கொற்றவனே யுந்தமக்குத் தடமுஞ்சொல்வார் விள்ளவே நிதியிருக்கு மிடமுஞ்சொல்லி விருப்பமுடன் கெம்பினுட நாடுஞ்சொல்லி உள்ளதொரு வுடல்பொருள்கள் ஆவியோடு உத்தமனே உந்தனுக்குத் தத்தமீடீநுந்து கள்ளமின்றி தத்தம்வர நடக்கவென்று கடாட்சமுடன் அருள்வளஞ் சொல்வார்பாரே |