| கொள்ளவென்று சொல்லுகையில் அடியேன்தானும் கொப்பெனவே கெம்புந்தி எங்கேயென்றேன் விள்ளவே எந்தனுக்கு சொன்னாரப்பா விருப்பமுடன் வடகோடிகானகத்தில் அள்ளவே அயோத்திநகர் மேற்பாகத்தில் அழகான கெம்புந்தி என்றுரைத்தார் மெல்லவே கெம்புந்திக் காணவென்று மேன்மையுடன் குளிகைகொண்டு விடைபெற்றேனே |