| செப்பவென்றால் அவர்களிடம் கிட்டிநின்றேன் செங்கதிரோன் போல்வீசும் சடலமப்பா ஒப்பவே தேகமது ரோமந்தானும் உத்தமனே கரடியென்றே செப்பலாகும் இப்புவியில் யாரேனுங்கண்டதில்லை எழிலான கரடிமயிர்சித்தரப்பா அப்பதியில் ஆசீர்மம் யாருங்காணார் அலைகடலில் வழிகாணார் மாண்பர்தாமே |