| உரைத்தேனே யின்னமொரு மார்க்கங்கேளு வகமையுள்ள புலிப்பாணி மைந்தாசொல்வேன் நிரைப்படியே எனதையர் காலாங்கிநாதர் நேராகயெந்தனுக்குச் சொன்னமார்க்கம் திரையான வடகோடி யாழிதன்னில் தீர்க்கமுடன் ஆசீர்மம் அங்கொன்றுண்டு வடகோடி கானகந்தான் சொல்லொண்ணாது வாகான குளிகைகொண்டு சென்றேன்பாரே |