| இறங்கியே மோனகுரு யெதிர்முன்பாக எழிலாக குளிகைகொண்டு நின்றேனங்கே திறமுடைய சித்தர்களோ வாயிரம்பேர் தீரமுடன் எந்தனை யேசிக்கவந்தார் நிற்மான பச்சையென்ற சித்துதாமும் நீராக்கி எந்தனையும் சபிக்கவந்தார் மாடீநுபோலே நின்றுவிட்டேன் போகர்யானும் மார்க்கமுடன் தள்பணிந்து தரிசித்தேனே |