| பார்த்தேனே மலையினிட மகிமைமெத்த பாருலகில் சித்தர்முனி கண்டதில்லை தீர்த்தமுடன் மலைமீதில் சுனைதானுண்டு திறமான பச்சையென்ற நிறத்தைப்போல கார்த்துமே காவலுடன் வெகுகோடிசித்தர் கதிகாணா மலைதனிலே யிருப்பாரங்கே பூர்த்தியாடீநு அவர்களிடம் சென்றேன்யானும் புகழாக வடிபணிந்து தொழுதிட்டேனே |