| பார்க்கவே எந்தனுக்கு பணிந்துமேதான் பட்சமுடன் முத்திருக்குந் தீவுதன்னை தீர்க்கமுடன் போகவென்று வடையாளங்கள் தீரமுடன் கேட்டார்கள் மாண்பரெல்லாம் ஏர்க்கவே யாழியென்னுங் கடலிலப்பா எழிலான முத்தெடுக்கப் போகாதப்பா மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு மகத்தான முத்தெடுக்க வேண்டும்பாரே |