| கண்டதொரு அலைகடலின் சப்தந்தன்னை காரிழையாள் ஸ்ரீராமர் தேவியப்பா கொண்டல்வண்ணன் அச்சுதனை தனைநினைத்து கொடுத்ததொரு சாபத்தால் அலையும்போச்சு விண்டபடி கற்பகத்தருவுக்கப்பா மேதினியில் சப்தமது யில்லைகண்டீர் தண்டலென்னும் பனைமரமும் அசைவுமில்லை தாரிணியில் தனக்கோட்டி மார்க்கந்தாமே |