| பூசிக்குங் கிரியைதனை யானுங்கண்டேன் பொங்கமுடன் தனக்கோட்டி யானும்வந்தேன் நேசித்து சம்புமகாரிஷியார்தம்மால் நேசமுடன் பின்னும்யான் சென்றுவந்தேன் ஆசித்து ஆசீர்மந்தன்னில்வந்து யடியேனும்தலைவணங்கி முடிவணங்கி வாசித்துப் பிணவத்தை யோதியேதான் வணக்கமுடன் பின்னும்யான் தொழுதிட்டேனே |