| இட்டாரே குருபர்ன ரிஷியார்தாமும் எழிலான போகர்முகந்தன்னைப்பார்த்து பட்டமரந் துளித்ததுபோல் பாலாநீயும் பட்சமுடன் வந்ததினால் வுந்தனுக்கு சட்டமுடன் வரந்தருவேன் என்றுசொல்லி சாங்கமுடன் எனக்குரைத்தார் ரிஷியார்தாமும் அட்டதிசை புகழவல்லோ வரங்கள்பெற்று வாசீர்மந்தான்கடந்து வந்திட்டேனே |