| கேட்டவுடன் சித்தர்கட்கு விடையுஞ்சொன்னேன் கெடியான காலாங்கி சீஷனென்றேன் நீட்டமுடன் தனக்கோட்டி காணவந்தேன் நீதியுடன் சீதையென்னும் தேவிகண்டேன் வாட்டமுடன் இடப்பாகங் குளிகைகொண்டேன் வாகான வாசீர்மமிங்கேகண்டேன் நாட்டமுடன் குளிகைகொண்டு இறங்கியல்லோ நாதாந்த சித்தொளிவைக் கண்டேனே |