| உள்ளான வாசீர்மந் தன்னிற்சென்றேன் ஓகோகோ நாதாக்கள் சித்தருண்டு கள்ளரென்ற சித்தரப்பா கணக்கோயில்லை காசினியில் அவர்பெருமை மெத்தவுண்டு தெள்ளமுர்தமானதொரு சித்துமுன்னே சிறப்புடனே குளிகைகொண்டு யானும்சென்றேன் மெள்ளவே சித்தர்முனி கண்டபோது மேதினியில் யாரென்று எனைக்கேட்பாரே |