| வந்திட்டேன் என்றதுமே ரிஷியார்தாமும் வணக்கமுடன் எந்தனுக்கு வாசீர்மித்து தந்திட்டார் மனோன்மணியைக்காணவென்று தகமையுடன் இடமதுவும் காண்பித்தார்கள் அந்தமுடன் எந்தனையும் அழைத்துக்கொண்டு வன்பான வாசீர்மம் தன்னின்முன்னே சொந்தமுடன் என்னைநிறுஃத்தி வுளவுசொன்னார் சூட்சமுடன் தான்கண்டு திரும்பினேனே |