| பண்புடனே ரிஷிமுனிவர் என்னைக்கண்டு பதறியே ஓடிவந்துயாரென்றார்கள் திண்பான காலாங்கி நாதர்தம்மை திடுக்கிட்டு மனந்தனிலே தான்நினைத்து நண்பாக காலாங்கி சீடனென்றேன் நாதாக்கள் சித்தொளிவு நடுங்கினார்கள் கண்பான மனோன்மணியைக் காணவென்று காசினியில் குளிகைகொண்டு வந்திட்டேனே |