| கண்டேனே மனோன்மணியாள் வீற்றிருக்கும் கடிதான வாசீர்மந்தன்னைக்கண்டேன் அண்டவொண்ணாச் சேனையது ரிஷிகள்கூட்டம் அங்ஙனமேயான்கண்டு பயமுங்கொண்டு தொண்டரெனும் ரிஷிமுனிவர் சித்தர்தாமும் தோற்றமுடன் ஆசீர்மந்தன்னைச்சுற்றி கொண்டல்வண்ணன் அச்சுதனும் முன்னேநிற்க கோடான கோடிவரை பார்த்திட்டேனே |