| இருப்பாரே மலைமீதும் பாறைமீதும் எழிலான வட்டமதில் இறங்கினேன்யான் விருப்பமுடன் குளிகையது பூண்டுகொண்டு வீரமுடன் அவர்களிடம் சென்றபோது பொறுப்பான மலையொன்று குகைதானுண்டு பொங்கமுடன் ஐராவதம் என்னலாகும் குருப்பான ஏழுவரை வுயரங்காணும் குணமான மலையொன்று கண்டேன்தானே |