| புறப்பட்டேன் சீனபதி கடலோரந்தான் புகழான வதிசயங்களெல்லாம்பார்த்து திறக்கவே வடக்குமுகந் திருப்பால்தன்னில் தீரமுடன் குளிகைகொண்டு சென்றேன்யானும் நிறமாறி தானிருக்கும் மாண்பரல்லோ நீடான வசுவத்தின் முகத்தைப்போல உறமான மாண்பர்களைக் கண்டேனப்பா வுத்தமனே ஜெகத்துக்குள் இருப்பார்தானே |