| பாரேதான் நினைத்ததொரு கல்விதன்னால் பாங்கான சப்தரிஷிபோலேயப்பா நேரேதான் நினைத்தவண்ணம் ரிஷிகள்போல் நேர்மையுடன் தான்பிரிந்தார் ரிஷிகளப்பா சீரேதான் அவர்கொடுத்த வரத்தினாலே சிறப்பான சப்தரிஷிபிறந்தாரங்கே கூரேதான் தேவரிஷி யென்னலாகும் குவலயத்தில் அரசரைப்போல் பிறந்தார்தாமே |