| கொடுத்தாரே பூவுலகில் பிழைக்கவென்று குவலயத்தி லென்மீதில் பட்சம்வைத்து அடுத்ததொரு குளிகைக்கு வுறுதிசொல்லி அப்பனே சாரனைகள் மிகவுங்கூறி வுடுத்துமே எந்தனையும் மலைவிட்டேகி வேதாந்த சித்துமுனி ரிஷிகளெல்லாம் ஒடுக்கம்வர புத்தியது மிகவும்கூற ஓகோகோ சப்தரிஷி போவென்றாரே |