| இறங்கினேன் கிருஷ்ணனவர் பள்ளிகொண்ட எழிலான கடலினது நடுமையத்தில் அறங்குடைய ஆவிலையைக்கண்டேனங்கே வப்பனே குளிகைகொண்டு வதின்மேல் நின்றேன் திறமுடைய குளிகையது வலுவினாலே தீர்க்கமுடன் சென்றேறி வந்தேனப்பா சிறகில்லாப் பட்சியது போலேநானும் கீர்த்தியுடன் குளிகையினால் பறந்திட்டேனே |