| ஆதியென்ற சத்தி பராபரமேகாப்பு அகிலமெலாம் பேர்படைத்த வுமையாள் காப்பு நீதியெனும் பரஞ்சோதி சுடரேகாப்பு நீடாழி யுலகனைத்தும் கொண்டோன்காப்பு பாதிமதி சடையணிந்த பரமன்காப்பு பாதாளந்தனில் வாழும் சேடன்காப்பு ஜோதியெனும் காலாங்கி பாதங்காப்பு சுத்தமுடன் தான்பணிந்தேன் பாதங்காப்பே |