| தானேகேள் சித்துவரும் நாளுமாச்சு தாரிணியில் வெகுகோடி மகிமைமெத்த மானேகேள் சொரூபமென்ற சித்துதாமும் மகத்தான நவகோடிரிஷிகள்முன்னே கானமுடன் சமாதிவிட்டு வெளியேவந்தார் கைலாயமேருகிரி சொரூபம்போலே பானமிர்தம் வுண்டுமல்லோ பாரின்மீது பட்சமுடன் சித்தொளியைக் கண்டிட்டீரே |