| இட்டாரே நந்தீசர் முனிவர்தாமும் எழிலான சமாதியிட பக்கந்தன்னில் விட்டகுறை இருந்ததினால் பின்னுங்காண விருப்பமுடன் வருவதற்கு வந்தாரல்லோ பட்டதொரு தன்வந்திரி பகவான்தனை பட்சமுடன் காணுகைக்கு நந்திதாமும் கிட்டியே சமாதியிட வலப்பக்கந்தான் கிருபையுடன் காண்பதற்கு நின்றார்பாரே |