| சென்றாரே சமாதியிட பக்கந்தன்னில் சிறப்புடனே சித்தர்முனி நிற்கும்போது குன்றான பொதிகைமலை கும்பமுனி குவலயத்தில் அதிசயத்தை பார்க்கவெண்ணி தென்திசையில் மலையைவிட்டு பகவான்தன்னை தேற்றமுடன் காண்பதற்கு முனிவர்தாமும் வென்றிடவே சமாதியிட பக்கந்தன்னில் வேதாந்த சித்தொளிவும் வந்திட்டாரே |