| நடுவான காண்டமிது ஏழாயிரந்தான் நலமான காவியத்துக்கினைவேருண்டோ வடுவான தன்வந்திரி பகவான்தானும் மார்க்கமுடன் சமாதிக்கு ஏகவெண்ணி அடுமையாமானதொரு சீஷவர்க்கம் வன்புடனே தானகைத்தார் வதீதமார்க்கம் படுகுழியில் சமாதிதனில் செல்லவென்று பண்புடனே தாமுரைத்தார் பகவான்தானே |